கடனை திருப்பிக் கேட்டதால் நண்பனைக் கொலைசெய்த நபர்!!

466

murder

அரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெட்டிமுல்லை நாரங்பிடியவை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்டவரும், கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் நீண்ட காலமாக சிறையில் இருந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், சில வருடங்களுக்கு முன்னர் 2 இலட்சம் ரூபா கடனாக பெற்றுள்ள நிலையில், அதில் ஒரு இலட்சத்தை திருப்பி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், மீதி தொகையை தருமாறு அவரது நண்பர் தொடர்ந்தும் கோரியிருந்த நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.