தமிழக மீனவர்கள் 41 பேருக்கான விளக்கமறியல் நீடிப்பு!!

386

jail

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற் பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 41 பேருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இவர்கள் 41 பேரும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



கடந்த வியாழக்கிழமை காங்கேசன்துறை நீதவான் நீதிமன்றினால் 34 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் இந்த மீனவர்கள், தமது படகு மீண்டும் தமக்கு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை இந்தியாவுக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.