வவுனியாவில் நாளை பூரண கடையடைப்பு : அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள்!!

550

vavuniya

சில தினங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாளைய தினம்(25.10.2016) பூரண கடையடைப்பு இடம்பெறும் என்று வவுனியா வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க நாளையதினம்(25.10.2016) பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுவிப்பதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை வடமாகாணம் முழுவதும் நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.