மது அருந்தி விட்டு தகராறில் ஈடு­ப­ட்ட மகனை அடித்து கொன்ற பெற்­றோர்!!

604

mathu

மது அருந்திவிட்டு வீட்டில் தொடர்ந்து தக­ராறு செய்­ததால், விக்கெட் கம்பால் தாக்கி மகனை கொலை செய்த தந்தை மற்றும் தாயை பொலிஸார் கைது செய்­தனர்.

சென்­னையை அடுத்த மறை­ம­லை­நகர், கரும்­பூரை சேர்ந்­தவர் செல் வம் (50). தனியார் நிறு­வன பாதுகாப்பு ஊழியர். இவ­ரது மனைவி மோகனா.

இவர்­க­ளுக்கு ஒரு மகள், சுரேஷ்­குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் ஒரு தனியார் நிறு­வ­னத்தில் பணி­யாற்­றினார். திரு­ம­ண­மா­க­வில்லை. மகள் திரு­ம­ண­மாகி பெருங்­க­ளத்­தூரில் வசித்து வரு­கிறார்.

தந்தை, மகன் இரு­வரும் குடிப்­ப­ழக்கம் உடை­ய­வர்கள். இரு­வரும் அடிக்­கடி தக­றாரில் ஈடு­பட்டு வந்துள்­ளனர். இந்­நி­லையில், பெருங்க­ளத்­தூரில் உள்ள மகள் வீட்­டுக்குச் செல்வம், மோகனா கடந்தவாரம் திங்­கட்­கி­ழமை சென்­று­விட்டு, செவ்­வாய்க்­கி­ழமை காலை 10 மணி­ய­ளவில் வீட்­டுக்கு திரும்பியுள்ளார்.

அப்­போது மகன் சுரேஷ்­குமார் இரத்த வெள்­ளத்தில் தலையில் பலத்த காயத்­துடன் இறந்து கிடந்­ததை பார்த்து தந்­தையும், தாயும் கதறி அழு­தனர். இது­கு­றித்து உற­வி­னர்கள் தகவல் தெரி­வித்­தனர். அவர்கள் சுரேஷ்­குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்டார் என தெரி­வித்­தாக கூறப்படுகிறது.

தக­வ­ல­றிந்து சம்­பவ இடத்­துக்கு சென்ற பொலிஸார், சுரேஷ்­குமார் தற்­கொலை செய்து கொண்டதற்கான அடை­யாளம் இல்­லை­யெ­னவும் கொலை செய்­த­தற்­கான அடை­யா­ளம்தான் உள்ளது எனவும் கூறி­யுள்­ளனர்.

இது­கு­றித்து தந்தை செல்வம், தாய் மோக­னா­விடம் விசா­ரித்தபோது, முன்­னுக்­குப்பின் முர­ணாக பதிலளித்­துள்ளார். இதனால் சந்­தே­க­ம­டைந்த பொலிஸார், இரு­வ­ரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசா­ரணை செய்­துள்­ளனர்.

அவர்கள் அளித்த வாக்­கு­மூலம் குறித்து பொலிஸார் தெரி­வித்­துள்­ள­தா­வது, கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு தந்தை செல்­வத்­துக்கும், மகன் சுரேஷ்­கு­மா­ருக்கும் போதையில் தக­ராறு ஏற்பட்டது.

அப்­போது மகன் சுரேஷ்­கு­மா­ரிடம் வேலைக்கு சென்று சம்­பளம் தரு­வ­தில்லை, ஆனால் தினமும் குடித்து விட்டு சுற்­று­கி­றாயே என தந்தை செல்வம் கேட்­டுள்ளார். இதை­ய­டுத்து பணம் தர­மு­டி­யாது என்று கூறிய, தந்­தையை சுரேஷ்­குமார் கொன்று விடுவேன் என மிரட்­டி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஏற்­க­னவே சுரேஷ்­குமார் இரு முறை கட்­டையால் தந்தை செல்­வத்தை தாக்கி கை, கால்­களை உடைத்துள்ளார். இதனால், தற்­போதும் ஏதா­வது செய்து விட போகிறான் என பயந்து, தனது மனைவி மோக­னாவை அழைத்து கொண்டு பெருங்­க­ளத்­தூரில் உள்ள மகள் வீட்­டுக்கு சென்­றுள்ளார்.

பின்னர் நள்­ளி­ரவில் செல்வம் மட்டும் வீடு திரும்பியுள்ளார். அப்­போது மகன் சுரேஷ்­குமார் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்தார். அவரை பார்த்து ஆத்­தி­ர­ம­டைந்த செல்வம், வீட்­டுக்குள் கிடந்த விக்கெட் கம்பால் சுரேஷ்­கு­மாரின் தலையில் ஓங்கி அடித்­துள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்­பட்டு இரத்த வெள்­ளத்தில் துடிது­டித்து இறந்தார். உடனே, கொலையை மறைக்க பெருங்­க­ளத்­தூரில் உள்ள மகள் சூர்யா வீட்­டுக்கு சென்று தனது மனைவி மோக­னா­விடம் நடந்த விபரத்தை கூறி­யுள்ளார்.

இதை மறைக்க நாம் இரு­வரும் காலை வீட்­டுக்கு செல்­லலாம் எனவும் கூறி­யுள்ளார். அதன்­படி, இருவரும் வீட்­டுக்கு சென்றுள்ளனர். கொலை யை மறைக்க மகன் இறந்து விட்டான் என்று உறவினருக்கும், மகனை யாரோ கொலை செய்து விட்­டனர் என பொலி­ஸா­ருக்கும் அழுது கொண்டே மாறி மாறி தகவல் கூறி­யது தெரியவந்­தது.

குடி­கார மகன் தான் இறந்து விட்டான். கண­வ­னை­யா­வது காப்­பாற்­றுவோம் என மனைவி மோகனாவும், கண­வ­னுடன் சேர்ந்து உற­வி­னர்­க­ளிடம், பொலி­ஸா­ரிடமும் பொய் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.