மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம் : பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

525

sucide

தன்னை காதலிக்குமாறு இளைஞர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததால் இளம் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரமணி, இவரின் மனைவி விஜயா.

இவர்களுக்கு காவியா (15) தர்ஷினி (10) ஆகிய இரு மகள்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகள் காவியா வீட்டருகில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

காவியா பள்ளி காலாண்டு விடுமுறையையொட்டி தன் பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் பாட்டி வீட்டருகே சாமுவேல் என்னும் ஆட்டோகாரர் காவியாவை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனை காவியா மறுத்துவிட்டு விடுமுறை முடிந்து தன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். பின்னர் போன் மூலம் காவியாவை தொடர்பு கொண்ட சாமுவேல் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்த காவியா தன் வீட்டில் யாருமில்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் போயிருந்த அவர் தாய் இதை பார்த்து திடுக்கிட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த பொலிசார் காவியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தன் மகள் சாவுக்கு சாமுவேல் தான் காரணம் என காவியாவின் தாய் பொலிசாரிடம் புகார் தர, விசாரணை நடத்தி வருகிறார்கள்.