தொழில் தொடங்க சிறந்த நாடுகள் பட்டியலில் சிங்கப்பூரை பின் தள்ளி நியூசிலாந்து முதலிடம்!!

641

nz

உலகளவில் தொழில் தொடங்க சிறந்த நாடு என்ற பெருமையை உலக வங்கி நியூசிலாந்து நாட்டிற்கு வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு தொழில் தொடங்க ஏற்ற நாடுகள் பட்டியல் ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 10 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வந்த சிங்கபூர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, முதலிடத்தில் இருந்த சிங்கப்பூரை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து முதலிடம் பெற்றுள்ளது. தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சட்ட சிக்கல்கள் குறைவு.

குறுகிய காலத்தில் தொழில் தொடங்கலாம் போன்ற காரணங்களால் நியூசிலாந்து நாட்டிற்கு இந்தப் பட்டியலில் முதலிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பட்டியலில், 2வது இடத்தில் சிங்கப்பூரும், 3வது இடத்தில் டென்மார்கும் இடம்பிடித்துள்ளன. 4வது இடத்தில் ஹொங்காங், 5 மற்றும் 6வது இடங்களில் முறையே தென் கொரியா, நோர்வே நாடுகள் உள்ளன.

மேலும், அமெரிக்கா 7வது இடத்திலிருந்து 8வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. ஜப்பான் 34வது இடத்தில் உள்ளது. சீனா 84வது இடத்திலிருந்து 78வது இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை, இந்தியா இப்பட்டியலில் 130வது இடத்தில் நீடிக்கிறது.