இலங்­கையில் பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் 14130 பேர்!!

250

sl-pro

இலங்­கையின் பெண் பாலியல் தொடர்­பான ஆய்வு மேற்கொள்­ளப்­பட்­டதில் 14130 பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் இது­வரை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. புத்­திக பத்­தி­ரன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும் ­போதே சுகா­தார பிரதி அமைச்சர் பைசல் காசிம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறு­கையில், நாடு பூரா­கவும் மேற்­கொண்ட ஆய்வின் பிர­காரம் பெண் பாலியல் தொழி­லா­ளர்கள் 14130 பேர் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். இதே­வேளை பாலியல் தொழிலாளர்கள் 2015 ஆம் ஆண்­டின்­போது 630 பேர் எச்.ஐ.வி. தொற்­றுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

எனவே பாலியல் தொழில் மூலம் பரவும் எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.