டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் தண்டால் எடுக்கும் வித்தியாசமான பாணியை அவ்வப்போது கடைபிடிக்கிறார்கள்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தானின் ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், இது போல் நடந்து கொள்வது பாகிஸ்தான் மீது எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும். எனவே அதை தவிர்க்க வேண்டியது அவசியம். அதற்கு பதிலாக தொழுகை செய்யலாம் என்றார்.
அவரது கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.
வெற்றியின் வெளிப்பாடாக தண்டால் எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது. வீரர்கள் சதம் அடிக்கும் போது 100 முறை தண்டால் எடுக்க வேண்டும் என்று கருதுகிறேன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் நிர்வாக குழுத் தலைவர் நஜம் சேத்தி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.






