உலகின் தலைசிறந்த கிரிக்கெட் துடுப்பாட்ட நட்சத்திரம் குமார் சங்கக்காரவின் பிறந்த தினம் இன்று!!

360

sanga

இலங்கையின் தலைசிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்களில் ஒருவரான இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று தனது 39 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.

1977 ஆம் ஆண்டு மாத்தளையில் பிறந்த குமார் சங்கக்கார, 2000 ஜூலை மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகள் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். அதே மாதம் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டி மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமானார். அப்போது அவர் 22 வயதான சட்டக்கல்லூரி மாணவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

134 டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்கள் உட்பட 12400 ஓட்டங்களையும் 404 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள் உட்பட 14234 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார குவித்துள்ளார். அத்துடன் 56 சர்வதேச இருபது 20 போட்டிகளில் 1382 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மிகச் சிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவரான அவர், டெஸ்ட் போட்டிகளில் 20 ஸ்டம்பிங்களைச் செய்துள்ளதுடன் 182 பிடிகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 20 ஸ்டம்பிங்களைச் செய்துள்ளதுடன் 182 பிடிகளைக் கைப்பற்றியுள்ளார்.

துடுப்பாட்டத்தில் ஏராளமான சாதனைகளை குமார் சங்கக்கார படைத்தள்ளார். இலங்கையின் சார்பில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர் குமார் சங்கக்கார ஆவார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 28016 ஓட்டங்களைக் குவித்த அவர், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக விளங்குகிறார்.