இந்தியாவில் தினமும் 4700 குழந்தைகள் இறக்கின்றனர் அதிர்ச்சி தகவல்!!

483

Indian_baby

இந்தியாவில் தினமும் 4700க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. World Vision India என்ற தன்னார்வ நிறுவனமே இத்தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது இந்த நிறுவனம் ஒரு நாட்டில் மக்கள் மருத்துவத்துக்காக செய்யும் செலவு, அவர்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதிகள், அவர்களின் வாழ்வியல் எதிர்பார்ப்பு, இனப்பெருக்க விகிதம் ஆகிய அம்சங்களைக் கொண்டு உலகளவில் ஆய்வு நடத்தியது.

இந்த அறிக்கையின் முடிவில் குழந்தைகளுக்கான மருத்துவச் சேவையில் 176 நாடுகளில் இந்தியா 135 இடத்தில் உள்ளது.
இந்தியாவில் சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு 7க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்.



இந்தியர்கள் தங்கள் சேமிப்பில் 62 சதவிகிதத்தை மருத்துவத்துக்காக செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். 1000 பெண்களில் 86 பேர் வரை 15-19 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

இந்தியா முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 4700 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். மருத்துவத்தில், பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி பெரிய அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.