1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.
1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் 20 வருட நிறைவையொட்டியும் சமூக தொண்டு நிறுவனமொன்று நிதி சேகரிப்பதற்காகவும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் மோதிய அப்போதைய இரு அணிகளும் கண்காட்சி போட்டியில் நாளை மோத உள்ளன.
இப்போட்டி இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியாக அவுஸ்திரேலியாவில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்காக சனத் ஜயசூரிய, களுவித்தாரண, அரவிந்த டி சில்வா, ரொசான் மஹாநாம, உப்புல் சந்தன, சமிந்த வாசு உள்ளிட்ட முன்னாள் நட்சத்திர வீரர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ளனர்.








