இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் பெரேரா சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இதுவாகும்.
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமாகின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாடி வருகின்றது.
நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 317 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.






