“என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார்” : சிம்பு!!

246

simbu

சிம்பு தனது வாழ்நாளில் சாதிக்க விரும்பும் 5 விஷயங்களை பற்றி தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு பேசியதை கீழே பார்ப்போம்.

நிறைய பேர் சிம்பு சூப்பர் ஸ்டாராக ஆவதற்கு முயற்சி பண்ணுறார்னு தப்பு தப்பா பேசுறாங்க. நான் எதற்கும் முயற்சி எடுக்கவே இல்லை. நான் இந்த சினிமாவுலேயே இல்லைன்னு வச்சுங்கங்க. எனக்கு இந்த சினிமாவே வேண்டாம். நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்ற போட்டி வேண்டாம். யாரு வேண்டுமானலும் சூப்பர் ஸ்டார் ஆகட்டும். நீங்க யாரை வேணும்னாலும் தலையில வச்சு கொண்டாடுங்க. யாருக்கு வேணும்னாலும் கைதட்டுங்கள். எனக்கு அதைப்பற்றியெல்லம் கவலை கிடையாது.

நான் சினிமாவுல நடிக்கிறது ஒரே காரணம், ஒருத்தன் 3 வருஷம் படம் பண்ணாவிட்டாலும் சரி, நீ வருவடா, உனக்காக நாங்க இருப்போம்டான்னு வந்து நின்னார்களே என்னுடைய ரசிகர்கள், அவர்களுக்காக மட்டும்தான் நான் மத்தவங்க பேசறதையெல்லாம் பரவாயில்லையின்னு சகிச்சுக்கிட்டு நடிச்சுக்கிட்டு இருக்கிறேன். இல்லையென்றால், எனக்கு இந்த சினிமாவே தேவையில்லை.

என்னுடைய கனவு, இலட்சியம், வாழ்நாளில் நான் சாதிக்கவேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயம் உண்டு. அது என்னவென்றால், இந்த உலகத்தில் எந்த மூலையில் ஒரு குழந்தை பிறந்தாலும், அந்த குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும். அடுத்தபடியாக நல்ல கல்வி, இருப்பதற்கு நல்ல இடம், எல்லாவிதமான சிகிச்கைகளும் அளிக்ககூடிய நல்ல வைத்தியசாலை, எந்தவித டென்ஷனும் இல்லாத பாதுகாப்பு இந்த ஐந்து விஷயமும் கிடைக்க வேண்டும்.

இந்த விஷயங்களுக்கெல்லாம் சிம்புவும் ஒரு காரணமாக இருந்தான் என்ற நிலைமை என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார். இந்த உலகத்தை விட்டு நாம் செல்லும்போது, எதையும் எடுத்துவிட்டு போகமுடியாது, அனால், கொடுத்துவிட்டு போகலாம். நான் கொடுத்துவிட்டு போகணும்னு நினைக்கிறேன். நான் பெருமைப்படுவது, மதிப்பது என்னுடைய ரசிகர்களை மட்டும்தான் என்றார்.