காதலியின் முகத்தில் தனது பெயரை பச்சை குத்திய இளைஞர்!!

567

t1

பிரிட்­டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காத­லியின் முகத்தில் தனது பெயரை பச்சை குத்­தி­யுள்ளார். 23 வய­தான ரையன் வைபர்லே எனும் இந்த இளைஞர், ஒரு டாட்டூ கலைஞர் ஆவார்.

இந்­நி­லையில் தனது காதலி கோர்ட்­னியின் முகத்தில் இமை­க­ளுக்கு மேல் தனது பெயரை பச்சை குத்தி­யுள்ளார் ரையன்.

இவரின் பெயரை பச்சை குத்­தி­கொண்ட முதல் யுவதி கோர்ட்னி அல்லர். ஏற்­கெ­னவே 38 யுவ­தி­களின் உடலின் பல பாகங்­களில் தனது இவ்­வாறு பச்சை குத்­தி­யுள்­ளாராம் ரையன்.

பெரும்­பாலும் போதையில் இருக்­கும்­போதே தனது பெயரை “டாட்­டூ”­வாக வரைந்­த­தாக ரையன் கூறு­கிறார்.  இப்­போது அவர்­களில் பலரின் பெயர்கள் தனக்கு நினை­வில்லை எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

அவர்­களில் சிலரை தான் ஒரு இர­வில மாத்­தி­ரமே சந்­தித்­த­தா­கவும் அவர் கூறு­கிறார். எனினும், கோர்ட்னியின் முகத்­தி­லேயே தனது பெயரை பச்சை குத்­திக்­கொள்ளச் செய்­வ­தற்கு அவரை ரையன் சம்­ம­திக்க வைத்­துள்ளார்.

அதே­வேளை, தனது கையில் காதலி கோர்ட்­னியின் பெயரை தான் பச்சை குத்தியுள்ளதாகவும் ரையன் வைபர்லே தெரிவித்துள்ளார்.

t2 t3