இலவச தொலைபேசியை பெறுவதற்காக தனது பெயரை ஐபோன் 7 என மாற்றிய இளைஞன்!!

270

iphone

யுக்­ரைனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஐபோன் ரக தொலை­பே­சி­யொன்றை இல­வ­ச­மாக பெறுவதற்காக தனது பெயரை ஐபோன் 7 என உத்­தி­யோ­கபூர்வமாக மாற்­றிக்­கொண்­டுள்ளார்.

யுக்­ரை­னி­லுள்ள தொலை­பேசி விற்­பனை நிலை­ய­மொன்று, தமது பெயரை ஐபோன் சிம் (ஐபோன் செவன்) என மாற்­றிக்­கொள்ளும் முதல் 5 பேருக்கு இல­வ­ச­மாக ஐபோன் 7 ரக தொலை­பே­சி­களை வழங்கு­வதாக அறி­வித்­தது.

அதை­ய­டுத்து, 20 வய­தான ஒலெக்­ஸாண்டர் டூரின் எனும் இளைஞர் தனது பெயரை “ஐபோன் சிம்” என மாற்­றிக்­கொண்டார். (சிம் என்­ப­தற்கு யுக்­ரை­னிய மொழியில் 7 என அர்த்தம்). கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவர் தனது பரிசை பெற்­றுக்­கொண்டார்.

இத்­தீர்­மா­னத்­தினால் அவரின் குடும்­பத்­தினர் பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.  இதை தன்னால் நம்ப முடி­ய­வில்லை இந்த இளை­ஞனின் சகோ­தரி டெட்­யானா தெரி­வித்­துள்ளார்.

எனினும், தனக்குப் பிள்­ளைகள் பிறக்­கும்­போது மீண்டும் பழைய பெயருக்குத் தான் மாறக்கூடும் என ஐபோன் சிம் கூறுகிறார்.