வவுனியாவில் இன்று(31.10.2016) பிற்பகல் 2 மணியளவில் பெய்த கடும் மழை காரணமாக வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் மழை நீர் சென்றுள்ளதால் வியாபார நடவடிக்கைகள் மேற்மெற்கொள்ள முடியாதுள்ளதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வியாபார நிலைய கட்டிடத் தொகுதியானது வவுனியா நகர சபை நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியாகும்.
தற்போது பருவ மழை ஆரம்பித்துள்ளதால் மேலும் பல அசௌகரியங்களுக்கு வியாபார நிலைய உரிமையாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
இன்று பெய்த கடும் மழை காரணமாக சில வியாபார நிலையத்தின் கூரைத்தகடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் வியாபார நிலையத்திற்கு பொருத்தப்பட்ட சீலிங் கூரைத்தகடுகளும் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் மின் இணைப்பு வயர்களும, மின் குமிழ்களுக்கு செல்லும் வயர்கள் அறுந்து காணப்படுகின்றன.
இவ் விடயம் தொடர்பாக நகரசபை பிரதம முகாமைத்துவ உதவியாளரை கேட்டபோது தனக்கு இதுவரை தகவல் கிடைக்கவில்லையெனவும் இதற்குரிய தீர்வினை உடனடியாக மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.