நிட்டம்புவவில் ஹோட்டல் உரிமையாளர் கழுத்து நெரித்துக் கொலை : இருவர் கைது!!

593

body

நிட்­டம்­பு­வவில் பிர­பல ஹோட்டல் ஒன்றின் உரி­மை­யாளர் கொலை செய்­யப்­பட்ட நிலையில் அவ­ரது சடலம் ஹோட்­டலின் அறை ஒன்­றி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ள­தாகப் பொலிஸார் தெரி­வித்­தனர்.

நிட்­டம்­பு­வ-­உ­ர­பொல பகு­தியில் உள்ள ஹோட்டல் ஒன்­றி­லி­ருந்தே சடலம் நேற்று பொலி­ஸாரால் மீட்கப்பட்­டது.

கொலை செய்­யப்­பட்­டவர் 62 வய­தான நபர் என்றும் இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் இரு­வரைக் கைது செய்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்தச் சட­லத்­துடன் அருகில் பூச்சி கொல்லி மருந்தும் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறித்த நபர் கழுத்தை நெரித்து கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரிய வந்­து­ளள்­தா­கவும் பொலிஸார் கூறினர்.

குறித்த சம்­பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.