வவுனியாவில் 50 கிலோ கஞ்சா பிடிபட்டது!!

982

kanja

நேற்றைய தினம் (31.10.2016) இரவுவேளை வவுனியா தாண்டிக்குளம் பொலிஸாரின் சோதனை சாவடியில் வழமைபோல் பெருமளவில் கேரள கஞ்சா பிடிபட்டுள்ளது. இவ் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வழமையான சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேகத்திற்கிடமான KDH வாகனமொன்றை நிறுத்தி சோதனையிட்ட போதே சுமார் 50கிலோ கிராம் கேரள கஞ்சா பிடிபட்டுள்ளது. யாழ்பாணத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்துசெல்லப்படவிருந்த கேரள கஞ்சாவினையும் சந்தேகத்திற்கிடமான இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த (29) காலை சொகுசு கார் ஒன்றிற்குள் 14 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மேலும் இதே சோதனை சாவடியில் பெருமளவான கஞ்சா தொடர்ச்சியாக மூன்றாவது தடைவையாக கடந்த ஒரு மாத காலத்திற்குள் பிடிபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.