வவுனியா சிறுவர் காப்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு!!

635

hang

வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சிறுமி இதே காப்பத்தில் தங்கியுள்ள தனது சகோதரியுடன் நேற்று வாய்த் தர்க்கப்பட்டிருந்த நிலையில் காப்பக வளாகத்தில் தூக்கில் தொங்கியுள்ளதாக காப்பகத்தின் நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இச் சிறுமியின் தந்தை நோய் வாய்ப்பட்ட நிலையில் வாழ்வதாகவும் தாயாரால் பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையில் தமது காப்பகத்தில் இவர்களை சேர்த்திருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.