வவுனியாவில் இலங்கை மின்சார சபையின் 47வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு!!

504

 
இலங்கை மின்சார சபையின் 47 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு வவுனியா பிராந்திய மின்சார சபை காரியாலயத்தில் 8.30 மணிக்கு இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.

வவுனியா மின்சார பொறியியலாளர் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டு இரத்ததானத்தை வழங்கியிருந்தார்கள்.

வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரத்த வங்கியில் இரத்தத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 dsc_0834 dsc_0835 dsc_0836 dsc_0839 dsc_0840 dsc_0841 dsc_0842 dsc_0844 dsc_0845 dsc_0849 dsc_0850 dsc_0851