பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் புதிய தீர்மானங்கள்!!

585

graduates

இனிவரும் காலங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக குறித்த பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் அளவிற்கே சேர்த்து கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில பல்கலைக்கழங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பிற்காக அதிகபடியான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் பி.எஸ்.எம்.குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக பேராதெனிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில பல்கலைகழகங்களின் வெளிவாரிப் பட்டிப்பிற்கு குறைந்தளவிலே மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் வெளிவாரிப் பட்டப்படிப்பு தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை முன்னெடுக்கும் கல்வி நிலையங்களின் தரத்தினை உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.