கலப்பு திருமணம் செய்து கொண்ட ஆசிரியை : இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

619

wed

கேரளாவில் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளம் காதல் ஜோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. கேரளா திரிச்சூர் மாவட்டம் கிலிமங்கலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் அங்குள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 6 ஆண்டுகளாக முகமது ஹரீஸ் என்ற முஸ்லீம் நபரை காதலித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளியில் தான் முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாகவும், தனக்கு ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என்றும் விடுப்பு கேட்டுவிட்டு சென்றிருக்கிறார்.

இவர்களின் காதலுக்கு அவர்களின் குடும்பத்தார் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், அவர்கள் அதை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கிடையில் நீங்கள் இனி வேலைக்கு வரத்தேவையில்லை என்று பள்ளி நிர்வாகம் சரண்யாவுக்கு கடிதம் எழுதி அவரது சான்றிதழ்களை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் முஸ்லீம் இளைஞனை திருமணம் செய்து கொண்டதால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட சரண்யாவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகிறது.

கம்னியூஸ்ட் கட்சியின் ஆதரவாலும், சமூகவலைதளங்கள் தந்த நெருக்கடியாலும் பள்ளி நிர்வாகம் அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது.

திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர்களை முன்னாள் கம்னியூஸ்ட் எம்.பி அசய்குமார் தனது மனைவி வீட்டில் தங்க வைத்துள்ளார்.