225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!!

241

Sri Lanka's players celebrate their victory during the fifth day of the test match between Sri Lanka and hosts Zimbabwe at the Harare Sports Club in Harare on November 2, 2016. This match marked Zimbabwe's 100th cricket match since their debut in 1992. / AFP / Jekesai Njikizana (Photo credit should read JEKESAI NJIKIZANA/AFP/Getty Images)

சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல் பெரேரா மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் தலா 110 ஓட்டங்களை விளாசினர்.

மேலும், கே.சில்வா 94 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, 537 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து, தனது முதலாவது இன்னிங்சை நிறைவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய சிம்பாபே அணிக்கு, Graeme Cremer மாத்திரம் சிறப்பாக ஆடி 102 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, ஏனைய வீரர்கள் அனைவரும் அரைச் சதம் கூட பெறாத நிலையில் வௌியேறினர்.

இறுதியில் 373 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சிம்பாபே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, 164 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை தனது 2வது இன்னிங்சில், 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 247 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இலங்கை சார்பாக இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக ஆடிய திமுத் கருணாரத்ன 110 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

தொடர்ந்து 412 என்ற கடினமான இலக்கை நோக்கி, தனது 2வது இன்னிங்சில் ஆடிய சிம்பாவே அணி, வீரர்கள் அடுத்தடுத்து விரைவாக வௌியேற, 186 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்ட நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, அந்த அணி 225 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.