வவுனியாவில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதித்த பொலிஸார்!!

643

tna

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கமும் (மோகன்), ஆதரவாளர்களும் நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப் பணிகளில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர்.

நேற்று மாலை 4 மணியளவில் தோணிக்கல் மாடசாமி கோவிலடிப் பகுதியில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.



இதன்போது திடீரென அங்கு வந்த வவுனியா பொலிசார் இப்பகுதிகளில் நீங்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட இயலாது என தெரிவித்து வேட்பாளர் க.சந்திரகுலசிங்கத்தின் (மோகன்), ஆதரவாளர்களையும், நண்பர்களையும் மிரட்டி, அவர்களிடமிருந்த பிரசுரங்களை பறித்துவிட்டு தொடர்ந்தும் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் உங்கள் வாக்குரிமையையும் இழக்கவேண்டி வருமென எச்சரித்துச் சென்றுள்ளனர்.