கமல், கௌதமி பிரிவு : அம்பலமாகும் உண்மைகள்!!

435

kamal

நடிகர் கமல்ஹாசனும், கவுதமியும் கடந்த 13 ஆண்டு காலமாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவரை விட்டு பிரிவதாக நடிகை கவுதமி அறிவித்தார்.

கவுதமி பிரிவு குறித்து கமல் அறிக்கை வெளியிட்டதாக வட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல், கவுதமி பிரிவு குறித்து தான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து கமல் கூறுகையில் “இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை என தெரிவித்திருக்கிறார்.