பெங்களூருவில் தண்ணீர் தாங்கி சாரதியான பாலகிருஷ்ணா மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகராக தெரிவு!!

536

11

 

மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகர் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணா சம்பியனாகியுள்ளார்.

5 ஆவது பில் – ஏஷியா உடற்கட்டு வல்லவர் போட்டி பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் 25 வயதான ஜி.பாலகிருஷ்ணா முதலிடம் பெற்று மிஸ்டர் ஏஷியா 2016 ஆணழகராக தெரிவானார்.

இவர் உடற்பயிற்சி பயிற்றுநராக பணியாற்றுவதுடன் மேலதிக வருமானத்துக் காக பெங்களூரு நகரில் தண்ணீர் தாங்கி சாரதியாகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தினமும் 750 கிராம் கோழி இறைச்சி, 25 முட்டைகள், 300 கிராம் சோறு, 200 கிராம் மரக்கறியை தான் உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பழங்கள் மற்றும் மேலதிக புரதச் சத்துக்காக மீன் ஆகியவற்றையும் உட்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

120 கிலோகிராம் எடையுடன் காணப்பட்ட பாலகிருஷ்ணா இப் போட்டிக்காக தனது எடையை 90 கிலோகிராமாக குறைத்துக்கொண்டார்.

12 13 14 15 16