இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்து வீராங்கனையான பிரதிமா சிங்கை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19ம் திகதி நடைபெற்ற நிலையில், திருமணம் வரும் டிசம்பர் 9ம் திகதி நடைபெறுகிறது.
வாரணாசியைச் சேர்ந்த பிரதிமா சிங்கிற்கு 4 சகோதரிகள் உள்ளனர். அவர்களும் கூடைப்பந்து வீராங்கனைகள் தான்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளரான இஷாந்த் சர்மா இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






