வவுனியா பாவற்குளம் படிவம்-06 கலைமகள் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்ககும் விழா அதிபர் திரு கந்தையா ஸ்ரீ கந்தவேள் தலமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் எம்.பி.நடராஜ் (கோட்டக் கல்விப் பணிப்பாளர் வவுனியா நகரம்) மற்றும் திரு ஜேசுதாசன் (வெங்கல செட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர்) மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பெற்றோரும் மணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
அத்தோடு வகுப்பாசிரியை செல்வி நந்தீபா அவர்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவன் சுரேந்திரராஜா நிலக்ஸனுக்கு துவிச்சக்கர வண்டி(சைக்கிள்) ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து வகுப்பாசிரியைக்கு பெற்றோர்கள் பென்னாடை போர்த்தி கௌரவித்தனர்
அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வானொலி ஜெட் மார்க்கட்டிங் நிறுவனம் ஊடாக அனைத்து மாணவர்களுக்குமான அப்பியாசக் கொப்பிகளை வழங்கினார்.
மேலும் இவ்வருடம் பாடசாலைக்கான மின்னியல் இணைப்பு வேலைக்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து குறித்த தொகையை ஒதுக்கீடு செய்து அவ் வேலையே சிறப்பாக செய்து தந்தமைக்கு அதிபரால் நன்றி தெரிவிக்கப்படடது.
அத்துடன் மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ள நிதி உதவி செய்த திருஜெசுதாசன் (வெங்கல செட்டிகுளம் கோட்டக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின் சகோதரர் திரு.ஜேசுரட்ணம் அவர்களுக்கும் அதிபர் நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் விருந்தினர் கௌரவிப்பும் இடம்பெற்று பின்னர் மதிய நேர விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது
-வவுனியா நெற் செய்திகளுக்காக கீதன்-






















