குருநாகல் வாரியபொல பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார். இவரின் முகத்திலும் தலையிலும் கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வாரியபொல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பெடாபொல அவுலேகம பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகத்திலும் தலையிலும் கூறிய ஆயுதம் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் 45 வயது மதிக்கத்தக்க ரசிக குமார என பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது வாய்த்தர்க்கம் முற்றி முறுகல் நிலையாக மாற்றம் அடைந்தமையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதாகவும் சந்தேக நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.






