மிதிவண்டியில் திருமண ஊர்வலம் : வியக்க வைக்கும் காரணம்!!

775

wedding

குஜராத் மாநிலம் சூரத்தில் காற்று மாசுபடுதலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 258 மணமக்கள் மிதிவண்டியில் திருமண ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.

சூரத் நகரில் வரும் 7ம் திகதி அங்குள்ள தனியார் அமைப்பு சார்பில் சமூக திருமண நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருமணம் என்றால் மணமகன் உறவினர்கள் நண்பர்கள் சூழ அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலம் போவது வாடிக்கை. ஆனால் குறித்த திருமணத்தில் பங்குபெறும் 258 மணமக்களும் இந்த முறை ஒரு சிறப்பான அனுபத்தை பொதுமக்களுக்கு பகிர முடிவு செய்துள்ளனர்.

அதன்படி மணமக்கள் அனைவரும் குறித்த சமுதாய தலைவர்கள் புடைசூழ நகரத்தின் முக்கிய சாலைகள் வழியாக மிதிவண்டியில் மணமகன் ஊர்வலம் நடத்த உள்ளனர்.

இது நகரத்தில் வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுபடுதலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் முதல்படி என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிகழ்வுக்கு பெருவாரியாக பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று இதன் ஒருங்கிணைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டுமின்றி வாகன நெரிசல், காற்று மாசுபடுதல், ஆரோக்கியம் உள்ளிட்டவையில் பொதுமக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும், குறித்த நிகழ்வில் பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.