வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக்கல்லூரிபுதிதாக தெரிவு செய்யபட்ட பழைய மாணவர்கள் சங்கத்தின் உறுப்பினர்களினால் நேற்று (05.11.2016) காலை பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்கத்தலைவருமான திரு. எஸ். அமிர்தலிங்கம் தலைமையில் இரத்ததான நிகழ்வுகள் இடம்பெற்றது.
வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்ட பற்றாக்குறையை அடுத்து இரத்ததான நிகழ்வு வவுனியா விபுலானந்தாக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.