140 அடி உயரத்தில் இருந்து பாய்ந்த பெண் : கயிறு அறுந்தமையால் ஏற்பட்ட விபரீதம் : அதிர்ச்சி வீடியோ!!

260

jump

140 அடி உயரமான இடத்திலிருந்து ஒரு பெண் கயிரை கட்டி கொண்டு கீழே குதித்த போது அந்த கயிறு திடீரென அறுந்ததில் அந்த பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.

தென் கொரியாவில் உள்ள ஒரு இடத்தில் 140 அடி உயரமான பாலத்தில் இருந்து கயிறுகளை பாதுகாப்பாக கட்டி கொண்டு கீழே உள்ள தண்ணீரில் குதிக்கும் ஒரு போட்டியை சிலர் குழுவாக சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அதில் யோ என்ற 29 வயது நிரம்பிய இளம் பெண் கலந்து கொள்ள தன் பெயரை முன்பதிவு செய்திருந்தார். அதன் படி குறித்த நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு தனது காதலருடன் வருகை தந்திருந்தார். போட்டி ஆரம்பிக்கும் முன் குறித்த பெண்ணிற்கு உடலில் பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்டு கயிறும் கட்டப்பட்டது.

பின்னர் அந்த உயரமான பாலத்தின் மேல் சென்ற யோ கீழே குதிக்க தயாராகி ஓடி வந்து குதித்தார். அப்போது அவர் உடலில் கட்டியிருந்த கயிரானது யாரும் எதிர்பாராதவிதமாக அறுந்ததில் அவர் அங்கிருந்து கீழே விழுந்தார்.

இதையெல்லாம் வீடியோ எடுத்து கொண்டிருந்த யோவின் காதலர் ,யோ கீழே விழுந்தை கண்டு அதிர்ச்சியில் கத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் யோவை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சையிற்காக சேர்த்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த யோவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த போட்டி நிகழ்ச்சியை அலட்சியமாகவும் பாதுகாப்பின்றி ஏற்பாடு செய்தமைக்காக குழுவின் தலைவரை,பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.