சிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முதன்முறையாக உபுல் தரங்க அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணித்தலைவர் மத்யூஸ், துணைத்தலைவர் சந்திமால் இருவரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் உபுல் தரங்க இந்த தொடருக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் சிம்பாப்வே தொடருக்கு துணைத்தலைவராக குசல் ஜனித் பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி வீரர்கள் விபரம்
உபுல் தரங்க (அணித்தலைவர்தலைவர்), குசல் மெண்டிஸ், செஹான் ஜயசூரிய, அசேல குணவர்தன, சசித்ர பத்திரன, நுவான் குலசேகர, தசுன் சானக, நுவான் பிரதீப், லஹிரு குமார, சுராங்க லக்மல், லக்ஷான் சந்தகன், ஜெப்ரி வெந்தசே, தனஞ்சய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல






