தனது தாய்க்கு தந்தை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் மற்றும் கடுமையான தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவித்து 12 வயதான சிறுவன் ஒருவன் பாடசாலை சீருடையுடனேயே பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பண்டாரகம பிரதேசத் தில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக தனது கல்வியல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தனக்கு வீட்டில் சுதந்திரமாக இருப்பதற்கு கூட முடியாத நிலைமை உருவாகியுள்ளது என்றும், இதனால் தனது தந்தைக்கு உரிய வகையில் எச்சரிக்கையும் ஆலோசனையையும் வழங்குமாறும் குறித்த சிறுவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளான்.
இந்நிலையில் இம் முறைப்பாடு தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






