சாரதியாக சவுதிக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக வந்தார்!!

289

dead

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வீரட் தோட்டத்தைச் சேர்ந்த ராயப்பன் ஓகஸ்டின் (வயது 33) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சவூதி நாட்டு வீடு ஒன்றுக்கு சாரதியாக பணி புரிவதற்காக சென்றதாக அவரின் மணைவி நிலானி ஆமறி தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு சாரதியாக சென்ற ராயப்பன் ஓகஸ்டின் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் திகதி இரவு 11மணி அளவில் தொலைபேசியுடாக தொடர்பு கொண்டு மனைவியுடனும் மகனுடனும் பேசியுள்ளதை தொடர்ந்து, மறுநாளான ஆகஸ்ட் மாதம் 01ம் திகதி அதிகாலை 04 மணி அளவில் ராயப்பன் ஓகஸ்டின் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு வந்ததாக அவரின் மனைவி மேலும் தெரிவித்தார்.

ராயப்பன் ஓகஸ்டினுடைய சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர பெறும் பாடுபட்ட அவரின் குடும்பம், சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று (09) புதன் கிழமை இரவு தனது கணவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரபட்டதாக மனைவி மேலும் தெரிவித்தார்.

சாரதியாக சென்ற போதிலும் அந்த வீட்டில் சாரதி வேலையை தவிர ஏனைய வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டுமென ராயப்பன் ஓகஸ்டின் பலமுறை மனைவிக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மின்சாரம் தாக்கி இறந்திருக்க வாய்பில்லை என்பதால் முழுமையான பிரேதே பரசோதனையை மேற்கொண்டால் மாத்திரம் கணவரின் உடலை பொறுப்பெடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்யு பணியகத்திற்கு மனைவி அறிவித்ததை அடுத்து சடலம் மீண்டும் பிரேத பரிசோனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.