அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்றும் ஹிலாரி தோல்வியடைந்தார்!!

256

haliry

அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே 99 இலட்சத்து 26 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்று 47.7 வீதத்தில் 232 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 5 கோடியே 96 இலட்சத்து 98 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று 47.5 வீதத்தில் 290 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் டிரம்பினை விட 2 இலட்சத்து 27 ஆயிரத்து 880 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும் தேர்தல் வாக்குகளில் டிரம்பினை விட குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

51 மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்தல் வாக்கெடுப்பில் தற்போது வரை வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 29 மாநிலங்களிலும் வெற்றிக்கண்ட டொனால்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள மிச்சிகன் மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளார்.மேலும் வெளியாகியுள்ள 50 மாநிலங்களின் முடிவுகளில் 21 மாநிலங்களில் மட்டுமே ஹிலாரி கிளின்டன் வெற்றிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hh