Room to read நிறுவனத்தின் எழுத்தறிவூட்டல்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளில் முன் டுத்துவரும் சமூக வாசிப்பு நிகழ்வு கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி.ம.திருவருள் நேசன் தலைமையில் நேற்று10-11-2016 சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகRoom to read நிறுவன. தொழில்நுட்பநிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு.அ.அன்பழகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்விவலய விஞ்ஞானபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் , தமிழ்ப் பாடஉதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி. உதயகுமார், ஆசிரிய ஆலோசகர் திரு.திருவருள்நேசன் ஆகியோரும்,கௌரவ விருந்தினர்களாக Room to read நிறுவனத்தின் எழுத்தறிவூட்டல் சாத்தியமாக்குனர் திரு.ச. கோகுலவதனன், நூலக முகாமைத்துவ சாத்தியமாக்குனர் ஜனாப் எவ்.எம்.முப்லிக் அவர்களும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.சுப்பிரணியம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.