வரவு செலவு திட்டத்தில் வாகனங்களின் விலை மாற்றம்!!

507

vvv

வரவு செலவு திட்ட வரி திருத்தங்களுக்கு அமைய சில வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே இதுபற்றி தெரிவிக்கையில், இயந்திர சிலின்டர் கொள்ளளவு 1000 சி.சி. வரையான மோட்டர் வாகன அலகு ஒன்றுக்கான வரி 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி மெரிட் வகையான மோட்டார் வாகனமொன்று 2 லட்சம் ரூபாவினால் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.

எச்.எஸ். 1800-2000 ரகத்திற்குட்பட்ட ஹயிபிரிட் வாகனங்கள் தொடர்பில் அலகொன்றுக்கான வரி 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வாகனமொன்றின் விலை 9 லட்சம் ரூபா தொடக்கம் அதிகரிக்கப்படும்.

இதன்படி எக்செல் வகையான வாகனங்கள் 10 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக இந்திக சம்பத் மெரஞ்சித் தெரிவித்தார்.

மின்சாரத்தில் இயங்கும் ´லீப்´ (Leaf) வகையான வாகனங்களுக்கு 3 லட்சம் தொடக்கம் 4 லட்சம் ரூபா வரை விலை குறைக்கப்பட்டு்ள்ளது.

இரட்டை பாவனை வாகனங்களுக்காக வரி சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான வாகனங்களுக்கு 45 லட்சம் என்ற கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஹய்எஸ் வகையான வாகனங்களின் விலைகள் 45 லட்சமாக நிலவும்.

முச்சக்கரவண்டிகளுக்கான வரி விதிப்பு அலகொன்றுக்கு 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (தீர்வை அதிகரிப்பு – ரூபா. 50,000.00)

1800 சி.சி.க்கு மேலான கொள்ளளவைக் கொண்ட வாகனங்களுக்கு தீர்வை வரி விதிப்பு இல்லை.

சில வானங்களின் தீர்வை வரி விதிப்பு பின்வருமாறு

BMW X5 தீர்வை வரி விதிப்பு ரூ.900,000.00 Nissan X-Trail தீர்வை வரி விதிப்பு ரூ.995,000.00 Mitsubishi Outlander தீர்வை வரி விதிப்பு ரூ.995,000.00

1000CC தீர்வை வரி விதிப்பு சிலிண்டர் கொள்ளளவு அலகொன்றுக்கு ரூ. 250.00

800cc வாகனங்களின் விலை ரூ. 200,000 ஆல் அதிகரிக்கப்படுகிறது.