2013 எனக்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை : போல்ட் கவலை!!

685

usainbolt

2013ம் ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை என்று உலகின் அதிவேக மனிதரான ஜமைக்காவின் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி ஓட்டப் பந்தயப் போட்டியான டைமண்ட் லீக், பெல்ஜியத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.80 விநாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தார் போல்ட்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் மைக் ரோட்ஜர்ஸ் (9.90 விநாடிகள்), ஜமைக்காவின் நெஸ்டா கார்டர் (9.94 விநாடிகள்) அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

காயம் உள்ளிட்ட பிரச்னையால் இந்த சீசனை எனது தடகள வாழ்க்கையில் சிறந்ததாக எண்ணவில்லை எனினும், உலக சம்பியன்ஷிப் தடகளம் உள்ளிட்ட போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது நிறைவைத் தந்துள்ளது என்று போல்ட் கூறினார்.