வவுனியாவின் பலபகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவந்த நிலையில் மீண்டும் ஒருவார இடைவெளியை தொடர்ந்து நேற்று (13.11.2016) மழை பெய்ய தொடங்கியுள்ளது .
வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
கடந்தவாரம் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில்மீண்டும் இவாரமும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் அவர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது நிலவி வரும் காலநிலை தொடர்ச்சியாக இரண்டு மூன்று தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .