ஆபிரிக்க நாடான சிம்பாவே நாட்டில் கலதாரி பாலைவனம் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற வாங் தேசியப் பூங்காவில் யானைகள், சிங்கங்கள், புலிகள் என பல விலங்குகள் வசிக்கின்றன.
இந்நிலையில் இந்த பூங்காவில் யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதாக குற்றச்சாட்டுகள் கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்துக்கொண்டிருந்தன.
மருத்துவ பயன்பாட்டிற்காக வேட்டையாளர்களால் விலங்குகளின் தந்தங்கள் மற்றும் கொம்புகள் வேட்டையாடப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களில் மட்டும் இப்பூங்காவில் 41 யானைகள் சயனைட் விஷம் வைத்து கொல்லப்பட்டு அதன் தந்தங்களை கொள்ளையர்கள் வேட்டையாடி சென்று இருக்கின்றனர் என்று பூங்காவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இது குறித்து நடந்த விசாரணையில் 5 வன விலங்கு வேட்டையாளர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சயனைட் விஷத்தால் இறந்துபோன விலங்குகளின் உடலை தொடும் விலங்குகளும் மற்றும் மனிதர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த விஷத்தால் சிங்கங்கள், காட்டெருமைகளும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.