ஹிலாரி கிளின்டனை ஜனாதிபதியாக்குங்கள் : 38 இலட்சம் பேர் கையெழுத்து மனு!!

606

hillary

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி கிளின்­டனை தெரி­வு­செய்ய வேண்டும் எனக் கோரி அமெ­ரிக்க தேர்தல் கல்­லூரி அங்­கத்­த­வர்­க­ளுக்கு மில்­லியன் கணக்­கானோர் மனு­வொன்றின் மூலம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கடந்த 8 ஆம் திகதி நடை­பெற்ற தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளின்­டனே இத்­தேர்­தலில் வெற்றி பெறுவார் என அமெ­ரிக்­கா­விலும் ஏனைய நாடு­க­ளிலும் அதி­க­மானோர் எதிர்வு கூறிய நிலையில், இத்­ தேர்தல் முடிவு பல­ருக்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது­வரை வெளி­யான பெறு­பே­று­க­ளின்­படி மக்­களின் வாக்­கு­களில் டொனால்ட் ட்ரம்பை விட, ஹிலாரி கிளின்டன் சுமார் 5 இலட்சம் வாக்­கு­களை அதி­க­மாக பெற்­றுள்ளார்.

எனினும், அமெ­ரிக்க தேர்தல் விதி­க­ளின்­படி மக்­களின் நேரடி வாக்­கு­களின் மூலம் ஜனா­தி­பதி தெரி­வு­ செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஒவ்­வொரு மாநி­லத்­துக்­கும் ஒதுக்­கப்­பட்ட தேர்­வா­ளர்கள் எனும் தேர்தல் கல்லூரி வாக்­கு­களின் அடிப்­படை­யி­லேயே ஜனா­தி­பதி தெரி­வு­ செய்­யப்­ப­டுகிறார்.

ஒவ்­வொரு மாநி­லத்­திலும் மக்­களின் வாக்­கு­களில் முத­லிடம் பெறும் வேட்­பா­ள­ருக்கு அந்த மாநிலத்தின் தேர்தல் கல்­லூரி வாக்­குகள் அனைத்தும் சென்­று­விடும். மொத்­த­மா­க­வுள்ள 538 தேர்தல் கல்­லூரி வாக்­கு­களில் 270 வாக்­கு­களைப் பெறு­பவர் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­ செய்­யப்­ப­டுவார்.

இது­வரை 48 மாநி­லங்­களின் பெறு­பே­றுகள் வெளி­யா­கி­யுள்­ளன. இதன்­படி, டொனால்ட் ட்ரம்ப் சுமார் 6 கோடியே 2.6 இலட்சம் வாக்­கு­களைப் பெற்­றுள்ளார். அவ­ருக்கு 290 தேர்தல் கல்­லூரி வாக்­குகள் கிடைத்துள்­ளன.

ஹிலாரி கிளின்­ட­னுக்கு 6 கோடியே 8.3 லட்சம் வாக்­குகள் கிடைத்­துள்­ளன. ஆனால், அவர் 228 தேர்தல் கல்­லூரி வாக்­கு­க­ளையே பெற்­றுள்ளார். எஞ்­சி­யுள்ள தேர்தல் முடி­வு­களில் மிச்சின் மாநி­லத்தில் ட்ரம்ப் வெல் வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதனால் அவரின் தேர்தல் கல்­லூரி வாக்­குகள் 306 ஆக அதி­க­ரிக்­கலாம். நியூ ஹாம்ப்­ஷ­யரில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெறுவார் எனவும் இதன்மூலம் அவரின் தேர் தல் கல்­லூரி வாக்­குகள் 232 ஆக அதிகரிக்கும் எனவும் எதிர்­பார்­க்கப்­ப­டு­கி­றது.

ஆனால் எதிர்­வரும் டிசெம்பர் 19 ஆம் திக­தியே தேர்தல் கல்­லூ­ரியின் தேர்­வா­ளர்கள் ஜனா­தி­ப­திக்­கான தமது வாக்­கு­களை அளிக்­க­வுள்­ளனர். இதை­ய­டுத்தே உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஜனா­தி­பதி தெரிவு அறிவிக்­கப்­படும்.

இந்­நி­லையில், மக்­களின் அதிக வாக்­கு­களைப் பெற்ற ஹிலா­ரியை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­ செய்­யு­மாறு தேர்­வா­ளர்­க­ளுக்கு மனு மூலம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

”ஜனா­தி­ப­தி­யாக சேவை­யாற்­று­வ­தற்கு ட்ரம்ப் தகு­தி­யற்­றவர். அவர் பொய்­யர், வெருட்­டு­பவர், கடந்த கால பாலியல் தாக்­கு­தல்­களை ஒப்­புக்­கொண்­டவர், அவரின் அனு­ப­வ­மற்ற தன்­யை­மா­னது அமெ­ரிக்க குடி­ய­ர­சுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தும்” எனவும் மேற்­படி மனுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எலிஜா பேர்க் என்­பவர் இந்த மனுவை ஆரம்­பித்திருந்தார். இந்த மனுவில், இலங்கை நேரப்­படி நேற்று மாலை வரை சுமார் 38 இலட்சம் பேர் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தனர்.

ஹிலாரி, தேர்தல் கல்லூரி வாக்குகளிலும் முதலிடம் பெறுவதற்கு குறைந்த பட்சம் 38 தேர்வாளர்கள் எதிர்மாறாக வாக்களிக்க வேண்டும். அமெ­ரிக்க தேர்தல் விதி­க­ளின்­படி மாநி­லங்­களில் வெற்றி பெற்ற வேட்­பா­ளர்­க­ளுக்கு தமது வாக்­கு­களை அளிப்­ப­தற்கு தேர்­வா­ளர்கள் கட­மைப்­பட்­ட­வர்கள். ஆனால் சில தேர்­வா­ளர்கள் எதிர்­மா­றாக வாக்­க­ளித்­துள்­ளனர்.

மொத்­த­மாக 157 தட­வைகள் தேர்­வா­ளர்கள் எதிர்­மா­றாக வாக்­க­ளித்­தனர் என ‘ஃபெயார் வோட்’ எனும் அமைப்பு கூறு­கி­றது. இவற்றில் 71 தட­வைகள் தேர்­வா­ளர்கள் தமது வாக்­கு­களை அளிப்­ப­தற்கு முன்னர், வேட்­பாளர் இறந்­தமை கார­ண­மாக இவ்­வாறு வாக்­க­ளிக்­கப்­பட்­டது.

3 வாக்குகளுக்குரிய தேர்வாளர்கள் வாக்களிப்பதற்கு சமுகமளிக்க வில்லை. ஏனைய எதிர்மாறான வாக்குகளுக்கு தேர்வாளர்களின் சொந்த அபிப்பிராய ங்கள் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் 29 மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தில் மக்களின் கூடுதல் வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கு தேர்வாளர்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.