சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கோச்சடையான் பட சம்பந்தமான அனைத்து வேலைகளையும் முடித்து கொடுத்துவிட்டார் ரஜனி. இதற்கு அடுத்தபடியாக எந்த படத்தில் நடிக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் உள்ளார்.
இவருடைய அடுத்த படத்தை தயாரிப்பதற்கு கல்பாத்தி அகோரம் நிறுவனம் தயாராக உள்ளது. இயக்குனர் யார் என்று அறிவிக்கும் பொறுப்பை ரஜனியிடம் ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் ஐ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஷங்கருக்கு போன் போட்டு ஐ படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டதா என்று விசாரித்து இருக்கிறார் ரஜனி.
அதற்கு ஷங்கர் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்று பதிலளித்திருக்கிறார். உடனே ரஜினி நாம ரெண்டு பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு பண்ணுவோம். வித்தியாசமான ஒரு கதையை ரெடி பண்ணுங்க என்று சொல்ல ஷங்கர் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாராம்.
எனவே ஐ படத்தை முடித்துவிட்டு இதற்கான பணிகளில் ஷங்கர் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.