பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு : ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு, இருவர் காயம்!!

501

police

குருநாகல் ரத்தரவூவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்தருவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத கார் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காருக்குள் இருந்த இருவரால் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்த நிலையில் குருநாகல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை தேடி குருநாகல் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.