ரஜினியுடன் ஜோடி சேரும் த்ரிஷா?

501

rajani

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கபாலி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இப்படத்தை ரஜினியின் மருமுகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

ரஜினி தற்போது ‘2.O’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு பா.ரஞ்சித் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தெரிவும் நடந்து வருகிறது.