நபர் ஒருவருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது தன்னை சண்டையிலிருந்து காப்பாற்றுவது போல வந்த நபர் தனது ஆடைகள் அனைத்தையும் நீக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக ரம்புக்கனை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு முறைப்பாடு மேற்கொண்டதன் பின்னர் காயமடைந்திருந்த நிலையிலிருந்த பெண் ஞாயிற்றுக்கிழமை கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணும் மற்றொரு நபரும் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது அயலவர் ஒருவர் முன்வந்து, குறித்த பெண்ணை காப்பாற்றுவது போல அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து அவரது அணைத்து ஆடைகளையும் கிழித்து நீக்கியதோடு அப்பெண்ணின் உடலை ஸ்பரிசம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பின்னர் குறித்த பெண் உள்ளாடையுடன் மாத்திரம் வீடுவரை சென்றுள்ள நிலையில் வீட்டுக்கு சென்று வேறு ஆடையை அணிந்து கேகாலை பொது வைத்தியசாலையில் சென்று அனுமதி பெற்றுள்ளார்.
ஆடைகளை அகற்றிவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடி ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






