தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் : கேயார் அணி அபார வெற்றி!!

477

cinema election

2013-2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நேற்று காலை நந்தனத்தில் நடந்தது. நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட பல தயாரிப்பாளர்கள் இந்த தேர்தலில் உற்சாகமாக வாக்களித்தனர்.

காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் முடிவடைந்தது. மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கேயார் 449 வாக்குகளும், கலைப்புலி எஸ்.தாணு 252 வாக்குகளும் பெற்றனர். துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407, டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.



செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதே பதவிக்கு போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். இவர்கள் மூன்று பேரைத் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கேயார் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.