வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் செல்லும் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி செல்லும் தனியார் பஸ்கள் இன்று காலை முதல் சேவையில் ஈடுபடவில்லை.
ஹம்பாந்தோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பஸ், வவுனியாவில் பயணிகளை ஏற்றுவதால் ஏற்பட்ட வாக்குவாதம் நீடித்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வவுனியா பஸ் சங்க உறுப்பினர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆகையால் கைது செய்யப்பட்டுள்ள தமது உறுப்பினர்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தாக்குதலுடன் தொடர்புடைய மற்றைய பிரிவினரை கைது செய்ய வேண்டும் என வவுனியா தனியார் பஸ் ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.
இவ்விரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.