ஏறாவூர் விபத்தில் சிக்கியிருந்தவர் மரணம்!!(CCTV காணொளி)

455

capture

மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணித்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கட ந்த திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் ஏறாவூர் நகர சபைக்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டபோது இந்த விபத்து சம்பவித்தது.

ஹோட்டல் உரிமையாளரான காத்தான்குடி-06 ஐச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆதம்லெப்பை முஹம்மது ஷாஜஹான் (வயது 39) என்பரே மரணித்தவராகும்.

இவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

காத்தான்குடியிலிருந்து ஓட்டமாவடி நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஏறாவூர் நகரில் பிரதான வீதிக்குக் குறுக்கே சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பலத்த அடிபட்டு வீதியில் விழுந்து காயம்பட்டிருந்தனர்.