8 வயது சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயது சிறுவர்கள் இருவர் கற்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி , பள்ளிவாசல்பாடு நாச்சிக்கள்ளி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பாதிக்கப்பட்டுள்ளான்.
கடந்த 6ம் திகதி குறித்த சிறுவன் பாடசாலைக்குச் செல்லாது பாலகுடா பிரதேச மீன்வாடி ஒன்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
அங்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன் 8 வயது சிறுவனை ஏமாற்றி மற்றுமொரு மீன்வாடிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
அதன் பின்னர் மூன்று சிறுவர்கள் இணைந்து 8 வயது சிறுவன் மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை அடுத்து வீட்டுக்குச் சென்ற சிறுவன் தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவித்த பின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு சிறுவன் தப்பிச் சென்றுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுவன் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.